Saturday, 4 May 2013

பாடம் 4



Cursive Letter M எழுதுவது எப்படி?.

Cursive Letter N எழுதுவது எப்படி?.
Cursive Letter O எழுதுவது எப்படி?
.
Cursive Letter P எழுதுவது எப்படி?.
Cursive Letter Q எழுதுவது எப்படி?.

Cursive Letter R எழுதுவது எப்படி?.
Cursive Letter S எழுதுவது எப்படி?.

Cursive Letter T எழுதுவது எப்படி?.
Cursive Letter U எழுதுவது எப்படி?.
Cursive Letter V எழுதுவது எப்படி?.
Cursive Letter W எழுதுவது எப்படி?.

Cursive Letter X எழுதுவது எப்படி?.
Cursive Letter Y எழுதுவது எப்படி?.

Cursive Letter Z எழுதுவது எப்படி?.
Read More

பாடம் 3

பாடம் 3:

இந்த பாடத்தில் A முதல் Z வரை உள்ள Cursive எழுத்துக்களை எப்படி எழுதுவது என்று பார்க்கலாம். 
கீழே உள்ள பாடத்தில் நீங்கள் பார்ப்பது தான் Curlive Letter A to Z.



Cursive Letter A எழுதுவது எப்படி?.




Cursive Letter B எழுதுவது எப்படி?.


Cursive Letter C எழுதுவது எப்படி?
.

Cursive Letter D எழுதுவது எப்படி?.


Cursive Letter E எழுதுவது எப்படி?.




Cursive Letter F எழுதுவது எப்படி?
.


Cursive Letter G எழுதுவது எப்படி?.



Cursive Letter H எழுதுவது எப்படி?
.


Cursive Letter I எழுதுவது எப்படி?.


Cursive Letter J எழுதுவது எப்படி?.


Cursive Letter K எழுதுவது எப்படி?.


Cursive Letter L எழுதுவது எப்படி?.



Read More

பாடம் 2


பாடம் 2:

இதில் நாம் மூன்று ஸ்ட்ரோக்ஸ்கலைபர்க்க பார்க்க போகிறோம். 

முதல் ஸ்ட்ரோக்:
            முதல் ஸ்ட்ரோக் Ascender Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும் அதன் தொடர்ச்சியாக வலது பக்கம் கீழிருந்து மேலாக ஒரு வளைவு வரையவேண்டும் அந்த வளவு Top Lineயை தொடுவதற்குள் முடிந்து விட வேண்டும். அவளவுதான். இதை ஒரு பக்கம் முழுவதும் எழுதி பழக வேண்டும்.

இரண்டாவது ஸ்ட்ரோக்:

          இரண்டாவது ஸ்ட்ரோக் Bottom Lineல் ஆரம்பித்து Ascender Line இல் முடிக்கவேண்டும் அடுத்து அதன் தொடர்ச்சியாகவே இடது பக்கம் சிறியதாக வளைவு கோடு வரவேண்டும் அந்த வளவு  Bottom Lineஇல் முடிய வேண்டும். இதிலும் நீங்கள் வரையும் கொடுகள் முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள்

மூன்றாவது ஸ்ட்ரோக்:

 மூன்றாவது ஸ்ட்ரோக் Ascender Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும் அடுத்து அதன் தொடர்ச்சியாகவே இடது பக்கம் சிறியதாக வளைவு கோடு வரவேண்டும் அந்த வளவு  Top Lineஇல் கொஞ்சம் தாண்டி முடிய வேண்டும். (கவணம் :  Ascender Lineயை தொடுவதற்குள் முடிந்து விட வேண்டும்.)  இதிலும் நீங்கள் வரையும் கொடுகள் முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள்.






உங்கள் கருத்துகள் வரவேற்க படுகின்றன. நன்றி!!!
Read More

பாடம் 1

பாடம் 1:
முதலில் நாம்  cursive writing எனப்படும் கையெழுத்தை எப்படி எழுதுவது என்று பார்க்கலாம். கீழே நீங்கள் பார்ப்பது தான்  cursive writing.



கண்டிப்பாக முயற்சி இருந்தால் உங்களாலும்  அழகான cursive writing எழுத முடியும். இந்த  cursive writing எழுதி பழக நாம்  4 கோடுகள் போட்ட நோட்டை உபயோகிக்க வேண்டும். இந்த நான்கு கோடுகளில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும் ஒரு பெயர் உண்டு அவை.





இந்த cursive writing கையெழுத்து எழுதுவதற்கு  பேசிக் ஸ்ட்ரோக் மிக மிக அவசியமானதாகும்.
முதல் ஸ்ட்ரோக்:
            முதல் ஸ்ட்ரோக் Ascender Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும். இதில் நீங்கள் வரையும் கொடு முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள்இதை ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும்.


இரண்டாவது ஸ்ட்ரோக்:

             அடுத்தது  இரண்டாவது ஸ்ட்ரோக் Top Lineல் ஆரம்பித்து Bottom Line இல் முடிக்கவேண்டும். இதிலும் நீங்கள் வரையும் கொடுகள் முடிந்த வரை சாய்வாக இருக்குமாறு பார்துகொள்ளுகள்இதையும் ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும். அடுத்தது முதல் ஸ்ட்ரோக் மற்றும் இரண்டாவது ஸ்ட்ரோக் ஆகிய இரண்டு ஸ்ட்ரோக் சையும்  சேர்த்து ஒரு பக்கம் முழுவதும் எழுத வேண்டும். உதரனத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


முதலில் இந்த ஸ்ட்ரோக்சை பொறுமையாக  முடிந்த வரை சாய்வாக முயற்சி  செய்து பாருங்கள். அடுத்த வகுப்பில் மற்றொரு ஸ்ட்ரோக் பார்போம்.

Read More

Thursday, 8 November 2012



அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள். அழகான கையெழுத்தானது படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. எழுத்து என்பதும் ஒரு ஓவியம்தான். அந்த ஓவியத்தை அழகாய் தீட்ட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும், அனைவருக்குமே அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை.



ஆனால் அழகான கையெழுத்து அமையப்பெறாதவர்கள் அதற்காக சோர்ந்துவிட வேண்டியதில்லை. உங்களின் கையெழுத்தை பயிற்சியின் மூலம் நன்றாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. எழுத்துக்களை கோடுகளின் அடிப்படையில் எழுதும்போது வேறுபடுவதில்தான் ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுபட்டு தெரிகிறது. எனவே முதலில் அதை சரிசெய்ய வேண்டும்.


உங்களின் எழுத்துக்கோர்வையில் ஏதாவது சில எழுத்துக்களோ அல்லது பல எழுத்துக்களோ சரியான வடிவம் இல்லாமல் இருந்து உங்களின் ஒட்டுமொத்த கையெழுத்து தோற்றத்தையே பாதிக்கலாம். எனவே நீங்கள் அத்தகைய எழுத்துக்களை அழகான வடிவத்தில் எழுத பழக வேண்டும். அழகான கையெழுத்திற்கு பெயர்பெற்றவர் அந்த எழுத்துக்களை எப்படி எழுதுகிறார் என்று பார்த்து அவரை பின்பற்ற முயற்சிக்கவும். சிலருக்கு ஒருசில எழுத்துக்கள் மட்டுமே பிரச்சினையாக இருக்கலாம். எனவே அவைகளை மட்டும் பயிற்சியின் மூலம் சரிசெய்தால், கையெழுத்து அழகாக மாறிவிடும்.


மேலும் கையெழுத்தை அழகாக மாற்றுவதில் இன்னொரு முக்கிய அம்சம் இடம். எழுத்துக்கு எழுத்து விடும் இடம், வார்த்தைக்கு வார்த்தை விடும் இடம் மற்றும் வரிக்கு வரி விடும் இடம் போன்றவை கையெழுத்தின் தோற்றத்தை மாற்றுகின்றன. எனவே இந்த வகையிலும் முறையான பயிற்சி நமக்கு வேண்டும். அழகான கையெழுத்துகளில் இந்த இடஅளவு எப்படி பின்பற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து நாமும் அதைப் பின்பற்றலாம்.


இப்படி பலமுறைகளைப் பின்பற்றி நமது கையெழுத்தை நாம் அழகாக மாற்றி, அதே அழகிய கையெழுத்தில் தேர்வை எழுதும்போது நாம் பெறும் மதிப்பெண்களுக்கு உத்திரவாதம் கிடைக்கும் என்று நம்பலாம். முன்பின் அறிமுகமே இல்லாத, யாரென்றே தெரியாத அதேசமயம் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு தேர்வாளர், உங்களின் விடைத்தாளை திருத்தும்போது உங்களைப் பற்றி மதிப்பிடும் வாய்ப்பினை பெறுகிறார். நீங்கள் எழுதியுள்ள பதில்களை அவர் படிக்கும் அதேவேளையில், உங்களின் கையெழுத்தே பிரதானமாக அவருக்கு தெரியும். உங்களின் கையெழுத்துதான் விடைத்தாள் திருத்துபவருக்கு மகிழ்ச்சியையோ அல்லது எரிச்சலையோ தருகிறது. அந்த மகிழ்ச்சியையும், எரிச்சலையும் பொறுத்துதான் உங்களின் மதிப்பெண் அமைகிறது.


அதேசமயத்தில் தேர்வு நோக்கத்திற்காக மட்டுமே கையெழுத்தை மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் எண்ண வேண்டாம். தேர்வு என்பது சிறிய நோக்கம் மட்டுமே. உங்களின் அழகிய கையெழுத்தானது பார்க்கும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தும். எல்லோரது பாராட்டையும் எல்லா நேரத்திலும் பெற்றுத்தரும். அந்த பாராட்டானது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். மேலும் நம் கையெழுத்து தலையெழுத்தையே  மாற்றும் சக்தி கொண்டது.

கையெழுத்தை வைத்து ஜோதிடமும் சொல்லலாம்.
  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள் பேரார்வம் மிக்க அதிக நம்பிக்கை உள்ளவர்களாகவும் அதிகாரப் பிரியர்களாகவும் இருப்பார்கள்.
  • சிறிய எழுத்துக்காரர்கள் எந்த வேலையையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால் தன்னம்பிக்கையும், துணிவும் இல்லாதவர்கள்.
  • எழுத்துகளை வலப்பக்கமாக சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையும் வாழ்வில் இன்பங்களையும் காண்கிறவர்கள்.
  • இடப்பக்கம் சாய்த்து எழுதுகிறவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • சொற்களுக்கு இடையே நிறைய இடம் விட்டு, எழுத்துகளை தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்தே நிற்பார்கள்.
  • சங்கிலித் தொடர்போல எழுதுகிறவர்கள் எதிலும் பற்றுடையவர்கள்.
  • சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாக சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.
  • எழுத்துகளை நிறுத்தி நிதானமாக அழகாக எழுதுகிறவர்கள் கடின சித்தமும் கலை உள்ளமும் கொண்டவர்கள்.

இது "அதிசய உண்மைகள்' என்ற நூலிலிருந்து எடுத்தது. இப்படி   நம் தலையெழுத்தையே  மாற்றும் சக்தி கொண்ட கையெழுத்தை மற்றுவது  ஒன்றும் கடினமான காரியம் அல்ல சுலபமாக மாற்றி விடலாம் அதற்கு தேவை ஆர்வமும் விடாமுயற்சியும் தான்.


உங்களின் கையெழுத்தை அழகாக மாற்றுவதற்கு எனக்கு தெரிந்த சில சுலபமான வழிமுறைகளை உங்களுக்கு சொல்கிறேன் அதை தவறாமல் பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் கையெழுத்தும் அழகானதை மாறிவிடும். 

இதோ வெற்றிகரமாக பயிற்சி முடித்த மாணவர்களின் கையெழுத்து மாதிரிகள் உங்கள் பார்வைக்கு


மாதிரி 1:


 மாதிரி 2:




Read More